சிம்புவை பின்தொடரும் 2 மில்லியன் ரசிகர்கள்!

எப்பொழுதும் ஏதாவது  சொல்லி அதனால் வம்புகளில் சிக்கிக் கொள்பவர் நடிகர் சிம்பு. சிம்புவின் ஒரு படம் படப்பிடிப்பு முடிந்து வெளியாவதில் எப்பொழுதும் காலதாமதம் ஏற்படும். இவர் நடிப்பில் வெளிவந்த வாலு, இது நம்ம ஆளு படங்கள் வெளிவருவதே பெரும் சிரமமாக இருந்தது. கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம் சிம்புவின் கால்ஷீட் பிரச்னையால் வெளி வருவதில் கால தாமதம் ஆனது.

ஆனாலும், இவருக்கு  ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் அதிகம்தான். அதற்கு சான்று அளிக்கும் வகையில் இவரின் ட்விட்டர் பக்கத்தை இரண்டு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில் இவர் நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் டீசர் வெளியானது, இதில் இவர் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, நீத்து சந்திரா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ள நிலையில் இதில் இவர் நடித்து இருந்த அஸ்வின் தாத்தா கதாபாத்திரம் அனைவரும் ரசிக்கும் வகையில் இருந்தது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!