வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (01/05/2017)

கடைசி தொடர்பு:15:49 (01/05/2017)

பி.வி.சிந்துவின் வாழ்க்கையும் படமாகிறது!

ஹிந்தி உலக சினிமாவில், விளையாட்டு உலகை சேர்ந்த பலரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் உலகை சேர்ந்த தோனியின் வாழ்க்கை படமாக்கப்பட்டது. சச்சின் வாழ்க்கை வரலாறு கூடிய விரைவில் திரைக்கு வரப் போகிறது. மேரிகோம் வாழ்க்கை வரலாறும் திரைப்படம் ஆக வந்து விட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துவின் வாழ்க்கையும் படமாகிறது. இந்த படத்துக்கு 'சிந்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சோனு சூட் எடுக்கிறார். இவர் சமீபத்தில் இயக்குநர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் வெளிவந்த தேவி படத்தில் நடித்து இருந்தார்.

சிந்து ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற போதே அவர் பற்றிய படத்தை எடுக்க வேண்டும் என்று இவர் முடிவு செய்து விட்டாரம். இவரைப் பற்றி 8 மாதமாக பல தகவல்களை சேர்த்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டதாம். பி.வி.சிந்து கேரக்டரில் நடிக்க தகுந்த ஹீரோயினை தேடிக் கொண்டு இருக்கின்றாரம் சோனு ஹீரோயின் கிடைத்த உடன் படப்பிடிப்பு ஆரம்பமாகி விடுமாம். இது பற்றி பி.வி.சிந்து தன் ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க