வெற்றி மாறனின் 'லென்ஸ்' திரைப்படம் மே 12-ம் தேதி ரிலீஸ்.

வெற்றி மாறன் ஒரு படம் எடுத்தாலே, அது நிச்சயமாக அது விருது வாங்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இவர் படத்தில் நடித்தாலே, நமக்கு ஏதோ ஒரு வகையில் தேசிய விருது கிடைக்கும் என்பது, படத்தில் நடிப்பவர்களின் நம்பிக்கை. 

இவர் இயக்கிய, 'ஆடுகளம்' படம் தேசிய விருது வாங்கியது. படத்தில் நடித்த தனுஷுக்கும் விருது கிடைத்தது. அடுத்ததாக இவர் இயக்கிய 'விசாரணை' படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலிலும் இடம்பெற்றது. 

தற்போது, வெற்றிமாறன்  'லென்ஸ்' என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை  மினி ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து, தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பாக தயாரித்துள்ளார்.  ’லென்ஸ்’ சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளைக் குவித்துள்ளது. 

’என்னை அறிந்தால்’, ’உருமி’ போன்ற படங்களில் நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இந்தப் படத்தை இயக்கி, அதில் நடித்துள்ளார். மேலும், ஆனந்த் சாமி, மிஷா கோசல் போன்றவர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர். 

சமூக வலைதளங்களினால் வரும் பிரச்னைகளைப் படத்தின் கதை சொல்கிறது. சைபர் கிரைம் பற்றிய செய்தியை மையமாகவைத்து படத்தின்  கதை எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு த்ரில்லர் படம்.  இந்த மாதம் 12-ம் தேதி ’லென்ஸ்’ படம் திரைக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!