Published:Updated:

எட்டெட்டு!

எட்டெட்டு!

எட்டெட்டு!

எட்டெட்டு!

Published:Updated:

பார்த்த படம், திருமுருகன், நடிகர்.

எட்டெட்டு!

''இந்திய சினிமா உலகின் தந்தை தாதா சாஹேப் பால்கேயின் வாழ்க்கைக் கதை மராட்டியில் 'Harishchandras Factory’ என்ற பெயரில் வெளியானது. மேஜிக் செய்துகொண்டு இருந்த பால்கே, ஒருமுறை வெள்ளையர்கள் சினிமா பார்ப்பதைக் கண்டார். வெள்ளைத் திரைக்குள் உருவங்கள் அசைவதையும் பேசுவதையும் அவரால் நம்பவே முடியவில்லை. கடன் வாங்கி, லண்டன் சென்று சினிமா கற்று, இந்தியாவுக்குத் திரும்பி ஐந்து ஹிட் படங்கள் எடுத்தார். பெரிய சம்பளத்துக்கு லண்டனில் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும், 'இந்தியா வில் ஒரு சினிமா ஃபேக்டரியை உருவாக்குவதே என் கனவு’ என்று தொடர்ந்து இங்கே சினிமா எடுத்தார். அவர் மட்டும் அன்று லண்டன் சென்றிருந்தால் இன்று இந்திய சினிமாவே இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பாதித்த சம்பவம் ஏ.வெங்கடேஷ், இயக்குநர்.

எட்டெட்டு!

''சில வருடங்களுக்கு முன் 'பெரிய பட்ஜெட் படமோ, சிறிய பட்ஜெட் படமோ... ஆடியோ ரிலீஸ், படம் ரிலீஸ், 25-வது நாள், 50-வது நாள் போன்ற சமயங்களில் மட்டும்தான் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்!’ எனத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு விதி இயற்றியது. ஆனால், சமீபமாக செல்வாக்கும், பணமும் படைத்தவர்கள் இஷ்டம்போல விளம்பரம் செய்கின்றனர். சேனல்களில் பல மணி நேரம் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். இதனால், சிறிய படங்கள் திண்டாடுகின்றன.  110-க்கும் அதிகமான படங்கள் வெளியிடப்படாமல் முடங்கிக்கிடக்கின்றன. சேனல் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராமநாராயணன் கூறியதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்!''

 கேட்ட இசை தீபா வெங்கட், நடிகை.

எட்டெட்டு!

'''மன்மதன் அம்பு’ படத்தில் 'ஹூஸ் தி ஹீரோ’ பாட்டு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆண்ட்ரியா இதுவரை பாடியதிலேயே இதுதான் ஸ்டைலிஷான பாட்டு. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஓப்பனிங் பீட் மாதிரி செம ஸாங். தமிழ், இங்கிலீஷ், இந்தின்னு மூணு மொழிகளில் ஒலிக்குது பாடல். இப்ப கொஞ்ச நாளா இந்தப் பாட்டைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கிட்டு இருக்கேன்!''

 சென்ற இடம் காயத்ரி தேவி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.

எட்டெட்டு!

''ஒரு திருமணத்துக்காக லண்டன் சென்றிருந்தபோது, ரசல் ஸ்கொயர் என்ற இடத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தேன். ஹோட்டலில் எனது பை திருடு போய்விட்டது. அதற்குள்தான் பாஸ்போர்ட், விமான டிக்கெட், கரன்ஸி எல்லாமே இருந்தது. ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டால், கண்டுகொள்ளவே இல்லை. அறையை நீட்டித்துக்கொடுக்கவும் மறுத்துவிட்டனர். காவல் நிலையத்திலும் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் பேசினார்கள். கடைசியில், தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி, புதிய பாஸ்போர்ட் வாங்கி, ஒரு வழியாகத் திரும்பி வந்தேன். 'லண்டன் போன்ற வெளிநாடுகளில் எல்லாமே கச்சிதமாக இருக்கும்’ என்ற நம் மன பிம்பம் நொறுங்கிவிட்டது. அவர்களைக் காட்டிலும் நம் ஊர் காவல் துறையும், நிர்வாகமும் எவ்வளவோ மேல்!''

 வாங்கிய பொருள் சுனிதா சாரதி, பின்னணிப் பாடகி.

எட்டெட்டு!

''எனக்குச் சின்ன வயதில் இருந்தே 'photosensitive eye’ பிரச்னை இருக்கு. ஸ்டுடியோவில் பவர்ஃபுல் விளக்குகள் மத்தியில் இருக்கும்போது, கண்கள் எரிச்சலில் கலங்கும். அதனால், இப்போதான் டெஸ்டட் சன் கிளாஸ் வாங்கினேன். 'ஏவியேட்டர்’ பிராண்ட் கிளாஸ். நல்ல ஃப்ரேம். ரொம்ப ஜில். பார்க்கிற எல்லோரும் 'ஏன் கண்ணாடி போட்டிருக்கே?’னு கேட்கிறாங்க. இன்னும் சிலர் நான் ஸ்டைலுக்காக கண்ணாடி போட்டு இருக்கிறதா நினைக்கிறாங்க. ஆனா, உண்மை இதுதான்... தமிழக மகா ஜனங்களே!''

 படித்த புத்தகம் முகமது அலி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

எட்டெட்டு!

'' 'பாலினப் பாகுபாடும், சமூக அடையாளங்களும்’ என்ற தலைப்பில் வ.கீதா, கிறிஸ்டி சுபத்ரா ஆகியோர் எழுதிய புத்தகம் படித்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணியம், பெண்ணுரிமை பற்றியே விவாதித்து இருக்கிறார்கள். ஒரு வகையில் இது சுய பச்சாதாபத்தைத் தேடுவதுபோலஇருக் கிறது. பெண்கள் மேல் ஆண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதாக, அதன் அடிநாதம் ஒலிக்கிறது. ஆணாதிக்கம் என்பது பரிணாமத்தின் விளைவு. ஆண், ஆறு அடி உயரம் இருப்பார்; பெண், ஐந்து அடி உயரம் இருப்பார் என்று அறிவியல் சொன்னால், அது தவறு எனப் புறக்கணிப்பது போன்ற வாதங்கள் இருக்கின்றன. தீர்வுகள் எதுவும் சொல்லப்படவில்லை. பெண்களுக்கே இந்தப் புத்தகம் நிச்சயம் கோபத்தை ஊட்டும்!''

 சந்தித்த நபர் 'நண்டு’ ஜெகன், நடிகர்.

எட்டெட்டு!

''சந்தித்த நபர் இல்லை, நபர்கள். இப்போ நான் 'கோ’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். படத்தில் 'சிறகுகள்’ என்ற இசைக் குழு இருக்கும். நானும் என்னைச் சேர்ந்த ஏழு பேரும் அந்தக் குழுவில் இருப்போம். அந்த ஏழு பேர் கூட ஒரு பாட்டு ஷூட் பண்ண தமிழ்நாடு முழுக்க 10 நாள் சுத்திட்டு நேத்துதான் திரும்பி வந்தேன். 10 நாளும் ஒவ்வொருத்தரோட கதையும் தெரிஞ்சுகிட்டேன். சினிமாவில் ஜெயிக்க அவங்க பட்ட கஷ்டங்கள், பல வருட அனுபவத்தைக் கொடுத்துச்சு. ஒவ்வொருத்தர் பின்னாடியும் விதவிதமான கதைகள். நார்மலா அவ்வளவு சாஃப்ட்டா இருக்கிற ஒரு சிலர் சரக்கடிச்சா... டெரராகி சிங்க முகத்தைக் காட்டுறதும் நடந்துச்சு!''

 கலந்துகொண்ட நிகழ்ச்சி பிருந்தா, நடன இயக்குநர்.

எட்டெட்டு!

''மானாட, மயிலாட சீஸன் 5-ன் ஃபைனல் அபுதாபியில் நடந்தது.  நான், கலா, குஷ்பு மூன்று பேரும் டான்ஸ் ஆடினோம். சினிமாவில் தினமும்தான் டான்ஸ் ஆடுறோம். ஆனால், என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் குஷ்பு, என் அக்கா ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து டான்ஸ் ஆடிய அந்த நாளை இப்போ நினைச்சாலும் மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. கிட்டத்தட்ட ஆறு வருஷங்களுக்குப் பிறகு அன்னிக்குதான் நான் ஸ்டேஜ் ஷோ பண்ணினேன். 'எந்திரன்’ படத்தின் தீம் மியூஸிக்குக்கு நாங்க ஆடியதை இப்பவும் யூ டியூப்ல அடிக்கடி பார்த்துப்பேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism