இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிக் கொண்டிருக்கிறது 'பாகுபலி'... எப்படி தெரியுமா?

கடந்த 2015-ம் ஆண்டு பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான போதே, அதன் பிரமாண்டத்துக்காகவும், செய்நேர்த்திக்காகவும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது. பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் முடியும்போது, 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற கேள்வியுடன் படம் முடிக்கப்பட்டு இருக்கும். 

இதையடுத்து, இந்த கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும் என்ற நோக்கில், பாகுபலி இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், கடந்த ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6500 ஸ்க்ரீன்களில் 'பாகுபலி 2' வெளியானது. பாகுபலியின் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து தெறிக்கவிட்டது என்றால், அதன் இரண்டாம் பாகம் இந்த வசூல் சாதனையை முதல் வாரத்திலேயே கடந்து மாஸ் காட்டியது. 

இதன் உச்சபட்சமாக, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 'பாகுபலி 2' மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹேன்ங்ஸ் நடிப்பில் வெளியான 'தி சர்கிள்' திரைப்படத்தையும் பாகுபலி முந்தியுள்ளது என்பதுதான் அனைவரையும் இந்த பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டில் கவனிக்க வைத்தது. அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இப்படிப்பட்ட உச்சங்களைத் தொட்டு, பாகுபலி இந்திய திரைப்படங்களின் சரித்திரத்தை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!