Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சினிமா கொண்டாட்டம் அல்ல... சினிமா புரட்சி!' - ரூ.1,000 கோடி வசூலை கடக்குமா 'பாகுபலி 2'

முன்னர், இந்திய சினிமாக்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தால் பெரிதாகப் பார்க்கப்படும். ஆனால், 1,000 கோடி ரூபாய் வசூல் என்பது, பெரிய ஸ்டார்களுடன் எடுக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவாலாக இருக்கிறது. இந்த நிலையில், ஒரு இந்திய சினிமா, அதுவும் தென்னிந்திய சினிமா அதைக் கடந்தால், சாதனை அல்ல வரலாற்று நிகழ்வாகத்தான் கருத முடியும். அப்படிப்பட்ட ஒரு வரலாற்று முத்திரையைத்தான் 'பாகுபலி 2' செய்யப்போவதாக இந்திய சினிமா வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது.

இத்தனைக்கும், 'பாகுபலி 2' வெளியாகி இன்னும் 10 நாள்கள் கூட ஆகவில்லை என்பதுதான் இந்த 'ரெக்கார்ட் பிரேக்கிங்' கலெக்‌ஷன் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கிறது. 

இதற்கு முன்னோட்டமாக  பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், '2-வது வாரத்தின் முதல் நாள், திரைப்படம் வெளியான முதல் நாளைப் போல வசூல் வேட்டையாடினால், அதற்குப் பெயர் சினிமா கொண்டாட்டம் அல்ல... 'சினிமா புரட்சி' என்று ட்வீட்டி இருந்தார். 


பாகுபலியின்  இந்தி வெளியீடு மட்டும் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். அதேபோல பாகுபலி இரண்டாம் பாகம் இதுவரை 750 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். இதில், இந்தியாவில் மட்டும் வசூல் பங்கு 650 கோடி ரூபாயும், வெளிநாடுகளின் வசூல் பங்கு 100 கோடி ரூபாய் அளவும் இருக்குமென தெரிவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வரலாற்று வசூலைத் தொடர்ந்துதான், இன்னும் ஒரு வாரத்துக்குள் 'பாகுபலி 2' கலெக்‌ஷன் 1,000 கோடி ரூபாயைக் கடக்கும் என்கிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement