'கிரகணம்' ட்ரெய்லரை வெளியிட்ட பிரபுதேவா

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும்  நடிகருமான கிருஷ்ணா, வித்தியாசமான கதையம்சம்கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

 

இவர் நடிப்பில், அண்மையில் வெளியான படம் 'யாக்கை' . இதையடுத்து, கிருஷ்ணாவின் நடிப்பில் 'பண்டிகை' 'விழித்திரு' ஆகிய இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இந்நிலையில், 'கிரகணம்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதில், கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன், கருணாஸ், மற்றும் கதாநாயகியாக நந்தினி ராய் நடித்து உள்ளனர். படத்தின் ரிலீஸுக்காக படக்குழு காத்துக்கொண்டிருக்க, நேற்று 'கிங் ஆஃப் டான்ஸ்' பிரபுதேவா, தன் ட்விட்டர் பக்கத்தில் 'கிரகணம்' படத்துக்கான ட்ரெய்லரை வெளியிட்டார். இந்த டிரைய்லர், ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய ஒரு எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

'கிரகணம்' திரைப்படத்தை இளம் இயக்குநர் 'இளன்' என்பவர் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைத்துள்ளார். ஶ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன், ஹையசி இன்டர்நேஷனல் மற்றும் கே.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!