வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (05/05/2017)

கடைசி தொடர்பு:15:34 (05/05/2017)

'பாகுபலி' கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் கதையில் நடிகை கார்த்திகா

'கோ' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை கார்த்திகா. இவர், தமிழ் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். இப்போது, இதற்கான காரணம் கிடைத்துவிட்டது.

இவர், 'பாகுபலி' படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் திரைக்கதையில், இந்தியில் மெகா பட்ஜெட்டில் தயாராக உள்ள ஒரு சீரியலில் நடிக்கப்போகிறாராம். இந்த சீரியலுக்கு, 'ஆரம்ப்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியலில், இவர் இளவரசி தேவசேனாவாக நடிக்கிறார். தேவசேனா என்று சொன்னவுடன் நமக்கு 'பாகுபலி' படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனுஷ்காதான் நினைவுக்கு வருவார். ஆனால், இது 'பாகுபலி' படத்தில் வந்த அனுஷ்கா கதாபாத்திரம் இல்லையாம்.

நடிகை கார்த்திகா பாத்திரம், திராவிட கலாசாரத்தை அடிப்படையாகக்கொண்ட ஒன்றாக இருக்குமாம். மேலும், இதில் நடிப்பதற்காக நிறைய ஸ்டன்ட் பயிற்சிகளையும் இவர் கற்றுவருகிறாராம். தென்னிந்தியாவிலிருந்து கார்த்திகா மட்டுமே இந்த இந்தி சீரியலில் நடிக்கிறார். மற்ற கலைஞர்கள் அனைவரும் பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சீரியலை இயக்குநர் கோல்டி பேல் இயக்க உள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க