மெக்சிக்கோவில் ரீமேக்காகும் விஜய் நடித்த திரைப்படம் | '3 Idiots' movie remade in Mexico

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (05/05/2017)

கடைசி தொடர்பு:15:58 (05/05/2017)

மெக்சிக்கோவில் ரீமேக்காகும் விஜய் நடித்த திரைப்படம்

விஜய், ஜீவா உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான 'நண்பன்' திரைப்படம் தற்போது மெக்சிக்கோவில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

மூன்று நண்பர்களின் கல்லூரி கால கலாட்டாக்களை மையமாகக் கொண்டு குறும்புடனும் நகைச்சுவையுடனும் வெளிவந்த திரைப்படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, சத்யராஜ், ஶ்ரீகாந்த், இலியானா ஆகியோர் நடித்த இந்தப் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். 2013-ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மேலும் இந்தப் படம் இந்திய கல்வி முறையை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.

ஹிந்தியில் அமீர்கான், மாதவன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த '3 இடியட்ஸ்' என்ற படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்திருந்தார்கள். தற்போது, இந்தப் படம் மெக்சிக்கோ வரை சென்றுள்ளது. மெக்சிக்கோ நாட்டில் '3 இடியட்ஸ்' படத்தை அதிகாரபூர்வமாக ரீமேக் செய்துள்ளனர். ஹிந்தியில் எடுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் காட்சிகளும் அதில் அப்படியே இடம் பெற்றுள்ளன. தற்போது அந்தப் படத்தின் ட்ரைலர் யூட்யூப்பில் வைரல்.