Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’விவேகம்' டீசர் ஏன் மே 1-ல் வெளியாகவில்லை தெரியுமா?

அஜீத் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர்தான் ரசிகர்களுக்கு அடுத்த பெரிய ட்ரீட்டாக இருக்கப்போகிறது. சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குநர் சிவா, அஜித்தை வைத்து மாஸ் ஹிட்களான 'வீரம்' மற்றும் 'வேதாளம்' படங்களைக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் 'விவேகம்' படம் முடியும் தருவாயில் உள்ளது. 

அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதியன்று 'விவேகம்' படத்தில் ஒரு பாடலுக்கான டீசரை வெளியிடலாம் என்று படக்குழுவினர் நினைத்திருந்தனர். ஆனால், படக்குழுவினர் அப்போது செர்பியாவில் இருந்தனர். திட்டமிட்ட ஷூட்டிங் ஷெட்யூல் பரபரப்புக்கு இடையே, அந்த டீசருக்கு நேரம் செலவழித்தால் நேரம் வீணாக விரயமாகும் என்பதால், மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, சென்னைக்குத் திரும்பிய பிறகு ரிலாக்ஸாக டீசரை வெளியிடலாம் என்று அஜித் கூறியிருந்தாராம். அதனால், அவரின் பிறந்தநாள் அன்று 'விவேகம்' படத்தின் 2-வது போஸ்டர் மட்டும் வெளியானது.

'விவேகம்' படக்குழுவினர் மே 15-ஆம் தேதி சென்னை திரும்பிய பிறகு அந்தப் பாடலின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், நேற்றிரவு படத்தின் இயக்குநர் சிவா, தன் ட்விட்டர் பக்கத்தில் மே 18-ம் தேதி விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்தச் செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த வேளையில் சற்று நேரத்துக்கு முன் சிவா தன் ட்விட்டர் பக்கத்தில் 'விவேகம்' படத்தின் டீசர் மே 11 அன்று வெளியாகும் என்று ட்விட் தட்டியுள்ளார். ஒரு நிமிடம் ஓடும் 'விவேகம்' படத்தின் டீசர் கண்டிப்பாக அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாகத்தான் இருக்கும்.

சாய்பாபாவின் தீவிர பக்தராகிய இயக்குநர் சிவா, மே 11ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சாய்பாபாவுக்கு உகந்த நாள் என்பதால்தான் படத்தின் டீசரை வெளியிடுகிறார் என்று கோலிவுட் உலகில் பேச்சு அடிபடுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement