இந்த நாளை துல்கர் சல்மான் நிச்சயம் மறக்கமாட்டார்! | Dulquer salman will never forget this day

வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (05/05/2017)

கடைசி தொடர்பு:21:35 (05/05/2017)

இந்த நாளை துல்கர் சல்மான் நிச்சயம் மறக்கமாட்டார்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'சி.ஐ.ஏ' திரைப்படம் வெளியாகும் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

cia

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் துல்கர் சல்மான். நடிகர் மம்மூட்டியின் மகனான இவர் 'ஓ காதல் கண்மணி' போன்ற காதல் கதைகளிலும் நடிப்பார், கம்மட்டிப்பாடம் போன்ற கேங்க்ஸ்டர் கதைகளிலும் கலக்குவார். இன்று துல்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'காம்ரேட் இன் அமெரிக்கா' திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று துல்கருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

துல்கர் சல்மானுக்கு இன்று பெண் குழந்தை குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ,' எனது கனவு நிறைவேறிவிட்டது. ஓர் அழகான இளவரசி எனக்கு பிறந்துவிட்டாள்' என அவர் கூறியுள்ளார். ஒரே நாளில் தான் நடித்தப் படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெளியாகையில், தனக்கு மகள் பிறந்திருக்கும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் துல்கர் சல்மான். அதுவும் சி.ஐ.ஏ படத்தில் கார்ல் மார்க்ஸ் கொள்கைகளை துல்கர் பேசுகையில், கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்தன்று அவர் மகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.