Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவிலும் கல்லா கட்டிய 'தங்கல்'!

அமீர் கான் நடிப்பில் வந்த 'தங்கல்' திரைப்படம், மிகப்பெரிய வெற்றிபெற்றது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் உண்மைக் கதையைத் தழுவி, இந்தப் படம் உருவானது. வணிகரீதியில் பல்வேறு சாதனைகளை இந்தப் படம் படைத்தது. அதே நேரத்தில், நாடு முழுவதும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது இந்தப்படம்.

Dangal


இந்த நிலையில், 'தங்கல்' படம் நேற்று (வெள்ளிக்கிழமை) சீனாவில் ரிலீஸ் ஆகியுள்ளது. அங்கு, சுமார் 9,000 திரைகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்தியப் திரைப்படம் ஒன்று சீனாவில் அதிகத் திரைகளில் திரையிடப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 'பாகுபலி', 8,000 திரைகளில் திரையிடப்பட்டிருந்தது.


இதற்கு முன் அமீர் கானின் பி.கே படம், அங்கு 4,000 திரைகளில் திரையிடப்பட்டிருந்ததே, இந்தியத் திரைப்படம் ஒன்று சீனாவில் அதிகத் திரைகளில் திரையிடப்பட்டு இருந்ததாக இருந்தது. வணிகரீதியாகவும் 'தங்கல்' சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலேயே, ரூ. 14.65 கோடி என்ற மாஸ் ஓப்பனிங் சாதனையைப் படைத்துள்ளது.


சீனாவில் ரிலீஸான இந்தியப் படங்களில், முதல் நாளில் இப்படி ஒரு ஓப்பனிங், வேறு எந்தப் படத்துக்கும் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close