நடிகர் சங்கக் கட்டடம் கட்ட தற்காலிகத் தடை!

கடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.  நடிகர் சங்க உறுப்பினர்கள், 26 கோடி ரூபாயில் பலதரப்பட்ட வசதிகளுடன் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.


 

இந்த நிலையில், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் அறிவிப்பும் வெளியானது, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மே 8-ம் தேதி மாலை 5 மணி வரை அனுப்பலாம் என்றும் அறிவித்திருந்தனர். இதற்காக, நடிகர் சங்கத்தில் ஒரு பெட்டியும் வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட தற்காலிகத் தடை விதித்துள்ளது.

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக, பொதுச் சாலையிலிருந்து 40அடி இடத்தை ஆக்கிரமிப்புசெய்துள்ளதாக, ஶ்ரீரங்கன் என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர்கொண்ட அமர்வு, நடிகர் சங்கக்  கட்டடம் கட்ட, பொதுச் சாலை இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், 'பொது இடத்தை ஆக்கிரமித்து நடிகர் சங்கக் கட்டடம் கட்ட மாநகராட்சி எப்படி அனுமதி வழங்கியது? இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!