ரஜினி ரஞ்சித் இணையும் புதுப்படம் எப்போழுது ?

ரஜினி படம் ரீலீஸ் ஆகிறது என்றாலே அவரின் ரசிகர்களுக்கு தீபாவளி வரப் போகின்ற ஒரு கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும்.

கடந்த வருடம் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தில் நடித்தார். ஒரு இளம் படைப்பாளி இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. 

இந்நிலையில் கபாலி படம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாகவும் ரஜினி  நடிக்கப் போகிறார்.

ரஜினியின் மருமகனும், நடிகருமாகிய தனுஷ் இந்தப் படத்தை  தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என தனுஷ் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், மே 28-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மும்பை தாராவி பகுதியில் கதை நடப்பது போல் இருப்பதால், சென்னையில் தாராவி பகுதி போல் செட் போட்டு, படக்காட்சிகளை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

படத்தின் கதை 70-களில் மும்பையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறதாம். குறிப்பாக மும்பையை கலக்கிய தாதா ஹாஜி மஸ்தான் கதைதான்  என்ற பேச்சும் அடிபடுகிறது.

படத்துக்கான இசையை ஷான் ரோல்டன் இசையமைப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றி சந்தோஷ் நாராயணன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!