எம்.ஜி.ஆர் பட டைட்டிலில், பிரபுதேவாவின் புதிய படம்! #Gulebagavali | Prabhudeva - Hansika starring Gulebagavali, goes on floors

வெளியிடப்பட்ட நேரம்: 07:31 (07/05/2017)

கடைசி தொடர்பு:07:24 (07/05/2017)

எம்.ஜி.ஆர் பட டைட்டிலில், பிரபுதேவாவின் புதிய படம்! #Gulebagavali

 

 

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹன்சிகா, இந்தப் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்! எனவே பிரபுதேவா - ஹன்சிகா கூட்டணி, இந்தாண்டில் வெளியான 'போகன்' படத்தைத் தொடர்ந்து இதிலும் இணைந்துள்ளனர். 

இவர்களுடன் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகிபாபு என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது; விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, KYR ஸ்டூடியோஸ் சார்பில், கே.ஒய். ராஜேஷ் தயாரித்துள்ளார்! இந்தப் படத்தின் தலைப்பில், பெரும் வரலாறே இருக்கிறது!

 

 

எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும், டி.ஆர்.ராஜகுமாரி - ராஜ சுலோச்சனா - வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்த படம்தான் ‘குலேபகாவலி’. கடந்த 1955-ல் வெளியான இந்த படத்தை, டி.ஆர்.ராஜகுமாரிதான் தயாரித்திருந்தார்! இவர்களைத் தவிர சந்திரபாபு, டணால் தங்கவேலு, ஏ. கருணாநிதி உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

கடுமையான பொருளாதாரச் சிக்கலில் தவித்த அவருக்கு உதவும் விதத்தில், டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக் கொடுத்த படம்தான் இது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க