ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் இந்தித் திரையுலகின் குயின் !

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் முன்னணியில் இருப்பவர் இந்தித் திரையுலகின் ராணி கங்கனா  ரனாவத்.

இவர் நடிப்பில் வெளிவந்த ’குயின்’ மற்றும் 'தனு வெட்ஸ் மனு' போன்ற படங்களில்  பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால், சினிமா உலகில் இவர் கிராப் சற்று உயர்ந்தது. ஜான்சி ராணி வாழ்க்கையை வரலாறாக எடுக்கும் பாலிவுட் படத்தில், இந்தி உலகின் குயின் கங்கனா  ரனாவத் கதாநாயகியாக நடித்து வருகிறார்இந்தப் படத்துக்கு மணிக்கர்ணிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் கிரிஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். பாகுபலியின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தின் திரைக்கதையில் தான் இப்படம் உருவாகவுள்ளது.

சங்கர் மகாதேவன் இசையில் வெளியாகும் இந்தப் படத்தில் நடிப்பது கங்கனாவுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், அதே நேரத்தில் இதைத் தன் அதிர்ஷ்டமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை கங்கனா இந்தப் படத்துக்கான 20 அடி போஸ்டரை ஜான்சி ராணியின் சொந்த ஊரான வாரணாசியில் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியிருப்பதாக  கங்கனா   ரனாவத் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!