Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் தனுஷின் 'லட்டு' ஆசை

யார் காட்டுல மழை அடிக்குதோ இல்லையோ தனுஷின் காட்டில் எப்பொழுதும் அடை மழைதான். இவர் நடித்த படங்கள் ஹிட் அடிப்பது மட்டுமல்லாமல், இவர் தயாரிக்கும் படங்களும் சூப்பர் ஹிட் அடிக்கின்றன. 

அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி',  ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.  கோலிவுட் திரையுலகில் எப்பொழுதும் ரொம்ப பிஸியாக இருப்பவர் நடிகர் தனுஷ்தான். இவர் கைவசம் மொத்தம் ஏழு திரைப்படங்கள் உள்ளன. அதில் ஒரு ஹாலிவுட் திரைப்படமும் அடக்கம். தற்போது ரஜினியின்  ’தலைவர் 161’  படத்தையும் தனுஷ்தான் தயாரிக்கிறார். இப்பொழுது கோலிவுட்டின் பெரிய கேள்வியே, இவர் இந்தப் படத்தில் நடிப்பாரா, மாட்டாரா என்பதுதான். 

இந்த நிலையில் தனுஷின் கவனம் மலையாளத் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. மலையாளத்தின் அறிமுக இயக்குநர் அருண் ஜார்ஜ் கே.டேவிட் இயக்கி வரும் 'லட்டு' எனும் மலையாளப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனுஷ் வாங்கியுள்ளார். இந்தப் படத்தில் வினய் போர்ட், பாலு வர்கீஸ் போன்றோர் நடிக்கின்றனர்.

 ’பிரேமம்’ படத்துக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேஷன்தான்  ’லட்டு’ படத்துக்கும் இசையமைக்கிறார். கூடிய விரைவில் லட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close