Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டப்பிங் வேலையில் உதயநிதி

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி நடித்துவரும் படத்துக்கான டப்பிங் இன்று தொடங்கியது. 


 

உதயநிதி நடிப்பில், எழில் இயக்கத்தில், ‘சரவணன் இருக்க பயமேன்', வரும் 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நடுவே 'சிகரம்தொடு' பட இயக்குநர் கெளரவ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படம் நடித்துவந்தார் உதயநிதி. ‘இப்படை வெல்லும்’ என்ற   தற்காலிகப் பெயருடன் படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தி முடித்தனர்.

லைகா நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு இந்தப் படம். எடிட்டிங் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால், படத்துக்கான டப்பிங் வேலைகள் இன்று தொடங்கியது. முதல் டப்பிங்கை உதயநிதி இன்று பேசினார். இன்னும் இரண்டு மாதத்துக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  டப்பிங் வேலைகள் முடிந்ததும், ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் ஷூட்டிங்கில் உதயநிதி கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், கூடிய விரைவில் ட்விட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close