எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்  2017-2018-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிக சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள மூன்று திரைப்படக் கல்லூரிகளில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் இந்நிறுவனமாகும்.  முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்ட இந்நிறுவனத்தில் 2016-2017 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்நிறுவனம் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று நான்கு ஆண்டு கால இளங்கலை-காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்நிறுவனத்தின்  2017-2018-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே, அனைத்து மாணவ / மாணவியரும்  இந்நிறுவனத்தின் மூலம் கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் “www.tn.gov.in”   எனும் இணையதள முகவரியில் 10.5.2017-இல் இருந்து பதிவிறக்கம் செய்து,  முதல்வர், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை- 600 113 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!