அமெரிக்காவில் சின்மயிக்கு நிகழ்ந்த துயரம் !

தென்னிந்தியாவின் முன்னணி பாடகி சின்மயி. இவரின் குரலுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். இவர் பல நடிகைகளுக்கு, பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். இந்நிலையில், அழகிய குரலுக்குச் சொந்தக்காரரான சின்மயியின் உடைமைகள் திருட்டு போனதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல ட்விட்களை பதிவிட்டுள்ள அவர், "அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை பயணத்துக்காக சென்றிருந்தேன்.  அப்பொழுது அங்குள்ள கார் பார்க்கில் காரை பார்க்கிங் செய்து விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது  கார் மிகவும் மோசமான நிலையில் உடைந்து, அதில் இருந்த என் உடைமைகள் திருட்டு போய் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "என்ன நடந்தது? என்பதை  ஐந்து நிமிடம் கழித்தே யூகிக்க முடிந்தது. சான்பிரான்சிக்கோ நகரில் திருட்டுப் போவது பொதுவான ஒன்று என போலீஸார் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் நடந்தபோது, பக்கத்தில் இருந்த ஒரு நபர் திருடனை துரத்தியதால், இது தொடர்பாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்று" தெரிவித்துள்ளார்.

இந்த கார் திருட்டில் ஈடுபட்ட பெண் சிவப்பு நிற முடியைக் கொண்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு இதே போல் அமெரிக்காவில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி-யின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளும் திருட்டுப் போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!