'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொலை செய்தார்' என்பதை முன்பே கணித்த பலே கில்லாடி! | This guy predicted 'Why kattappa killed bahubali' before release

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (09/05/2017)

கடைசி தொடர்பு:20:54 (09/05/2017)

'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொலை செய்தார்' என்பதை முன்பே கணித்த பலே கில்லாடி!

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என பாகுபலி-2 வெளியாகும் முன்பே மிகச் சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால் என்ற இளைஞர். படம் பார்க்காதவர்கள் இதை படிப்பதை தவிர்க்கலாம்! ( Spoilers Ahead)

பாகுபலி

2015-ல் வெளியான பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைவிட அது விட்டுச் சென்ற கேள்விதான் பாகுபலி-2க்கான விளம்பரம். அது 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்' என்பது தான். இந்தக் கேள்விக்கு விடைக்காணவே தற்போது வெளியாகியுள்ள பாகுபலி-2-ம் பாகத்தை முந்திக்கொண்டு பார்க்கிறார்கள் சினிமா ரசிகர்கள். அதன் விளைவாக 1000 கோடி வசூல் சாதனையையும் பாகுபலி படைத்துவிட்டது.

இதனிடையே பாகுபலி 2-ம் பாகம் வெளியாகும் முன்னரே ஏன் கட்டப்பா அப்படி செய்தார்? என சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால். கோரா இணையதளத்தில் அவரது பதிவில் 'ராஜ்ஜியத்தையும் தேவசேனாவையும் இழந்த பல்வாள் தேவன், சூழ்ச்சி செய்து சிவகாமி மூலமே பாகுபலியைக் கொள்ள கட்டப்பாவுக்கு உத்தரவிட்டிருக்கலாம்' என கணித்திருக்கிறார் அவர். அண்மையில் வெளியான பாகுபலி 2-ம் பாகத்தில் இவரின் கணிப்பு மிகச் சரியாக ஒத்துப்போயிருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.