Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர் அடுத்த ஜேம்ஸ் பாண்டா..? ஒப்புக்கொள்ளாத ஹாலிவுட் நடிகை!

Idris Elba

 'கறுப்பின நடிகரான இட்ரிஸ் எல்பா அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை ஒப்புக்கொள்ளவே முடியாது' என்று சொல்லியிருக்கிறார், ஹாலிவுட்டின் மூத்த நடிகை ஜோன்னா லும்லி.

2015-ம் ஆண்டு, 'இனி பாண்டாகத் தொடர்ந்து நடிப்பதற்குப் பதில் என் கைகளை நானே முறித்துக்கொள்வேன்' என்று சொன்னார், தற்போதைய ஜேம்ஸ்பாண்டாக இருக்கும் டேனியல் கிரெய்க். அப்படிச் சொன்னாலும், தொடர்ந்து அவர்தான் பாண்ட் திரைப்படங்களில் நடித்துவருகிறார். காரணம், ஜேம்ஸ் பாண்ட் படத் தயாரிப்பாளர்களான பார்பரா ப்ரொக்கொலி மற்றும் மைக்கேல் வில்சன் ஆகியோர் டேனியல் கிரெய்க்கையே தொடர்ந்து தங்களது விருப்பத் தேர்வில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்டுக்கான தேடுதல் தொடங்கியிருக்கிறது. டாம் ஹார்டி, டாம் ஹிடில்ஸ்டன் ஆகியோரைத் தொடர்ந்து, இட்ரிஸ் எல்பாவும் புதிய ஜேம்ஸ் பாண்டுக்கான போட்டியில் இருக்கிறார். ஆனால், இட்ரிஸ் எல்பா இந்தப் பட்டியலில் இருப்பதை, ஹாலிவுட்டின் பல மூத்த பிரபலங்கள் விரும்பவில்லை. அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இட்ரிஸ் கறுப்பின நடிகர் என்பதால், இந்தப் புறக்கணிப்புகளைச் சந்திக்கிறாரா என்ற கேள்வியும் ஹாலிவுட்டில் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், 'ஆன் ஹர் மெஜெஸ்டிஸ் சர்வீஸ்'  என்கிற பழைய ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த ஜோன்னா லும்லி, 'இட்ரிஸுக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பதற்குக் காரணம், அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல. மாறாக, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயான் ஃப்ளெமிங் வர்ணித்திருக்கும் பாண்ட் கதாபாத்திரத்துக்கு, இட்ரிஸ் எந்த வகையிலும் பொருந்த மாட்டார். அதனால்தான், அவர் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக வரக்கூடாது என்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close