அடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகும் டோலிவுட்..!

'பாகுபலி' படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்ததன் விளைவு, பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதேபோல ஒரு வரலாற்றுக் காவியத்தைப்  படைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர்.

சில நாள்களுக்கு முன்பு, 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோகன்லால் நடிக்கும் 'மகாபாரதம்' படம் உருவாகப்போகிறது' என்று அறிவிப்பு வந்தது. ஆனால் இப்போது, ராமாயணத்தைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'மகதீரா' படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மது மந்தேனா மற்றும் நமித் மல்கோத்ரா ஆகியோருடன் இணைந்து, இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்க உள்ளார். ராமாயணத்தைப் படமாக்கும் கதை விவாதத்தில் பல வருடங்களாக ஈடுபட்டுவந்தனராம். இந்தப் படம், மூன்று பாகங்களாக வெளிவர இருக்கிறதாம். 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்க முடிவுசெய்துள்ளனர். படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் கூடிய விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!