வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (11/05/2017)

கடைசி தொடர்பு:09:00 (12/05/2017)

நடிகர் ரஜினியைச் சந்திக்க அடையாள அட்டை..!

சில நாள்களுக்கு முன்னர் ரசிகர்களின் சந்திப்பை ரத்து செய்த நடிகர் ரஜினிகாந்த், ‘வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறேன்’ என அறிவித்து ரசிகர்களை மீண்டும் குஷிப்படுத்தியுள்ளார். 

சிவாஜி படத்துக்குப் பின்பு ரஜினி தன் ரசிகர்களைச் சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, தன் ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு விசேஷ அடையாள அட்டை வழங்கப்படயிருக்கிறது. இந்த அடையாள அட்டையில் 'க்யூஆர்' கோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த அட்டையில் ரசிகர்கள் எப்போது ரசிகர் மன்றத்தில் இணைந்தார்கள், தற்போது என்ன பதவி வகிக்கிறார்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இருக்குமாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க