என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மினிஸ்டர் காந்தி?

கவின் மலர்,சமஸ்

##~##

''கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!'' என்று உற்சாகமான 'தென்றல்’ ஸ்ருதி, பொது அறிவுக் கேள்விகள் என்றதும் ஜெர்க் ஆனார்.

 ''வாத்தியார்ட்டயே கேள்வியா?'' எனத் தயாரானார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.

''தமிழ்நாட்ல நடிகைங்க என்ன சொன்னாலும் சென்சேஷன் ஆகிடுது!'' என்று தயக்கத்துடன் கேள்விகளை எதிர்கொண்டார் அஞ்சலி.

இரவு பகலாக 'மங்காத்தா’ ஆடிக்கொண்டு இருந்த வெங்கட்பிரபு, ''எவ்வளவு பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?'' என்று கலாய்ச்சலுக்கு ரெடி.

''குட்டிப்புள்ளையா இருக்கும்போது, க்விஸ்ல நான் கில்லாடி. இப்ப பெரிய புள்ளையா ஆனதுக்கு அப்புறம் கேப் விழுந்துடுச்சே...'' என்று ஆர்வமானார் ஜனனி அய்யர்.

மினிஸ்டர் காந்தி?

அரசியல் பிரவேசத்துக்கு முன் ஜெயலலிதா கடைசியாக நடித்த படம் எது?

சரியான பதில்: 'நதியைத் தேடி வந்த கடல்.’

ஸ்ருதி: ''ஏதாச்சும் தப்பா சொல்லி... வேணாங்க. நான் பதிலே சொல்லலை.''

அழகிய பெரியவன்: ''ம்...ம்...ம்... இந்தக் கேள்வியை சாய்ஸ்ல விடுறேன்!''

அஞ்சலி: ''ஆங்... ஸ்கூல் டேஸ்ல இருந்தே ஜி.கே-ல நான் ரொம்ப வீக் சார்!''

வெங்கட்பிரபு: ''அது லெனின் டைரக்ட் பண்ண படம்னு நினைக்கிறேன்... இசைஞானிதான் இசை. சரி... சமாளிக்கலை. எனக்குத் தெரியலைங்க!''

ஜனனி அய்யர்: ''நான் அப்ப பிறக்கவே இல்லியே. வாட் டு டூ?''

''இந்தியா விடுதலை அடைந்தபோது, காந்தி எந்தத் துறையின் அமைச்சராக இருந்தார்?''

சரியான பதில்: அவர் அமைச்சர் பதவியே வகிக்கவில்லை!

ஸ்ருதி: ''காந்தி தாத்தா அமைச்சரா  இருந்தாரா... ஐயோ, தெரியலியே?''

அழகிய பெரியவன்: ''அவர் எந்தத் துறையிலும் அமைச்சராக இல்லை. ஆனால், மத நல்லிணக்கத் துறைக்கான அறிவிக்கப்படாத அமைச்சராக இருந்தார்!''

மினிஸ்டர் காந்தி?

அஞ்சலி: ''நான் இதுக்கு லைஃப் லைன் யூஸ் பண்ணிக்கிறேன். (பக்கத்தில் இருக்கும் அம்மாவிடம்) ''உனக்குத் தெரியுமாம்மா?'' (அவரும் உதட்டைப் பிதுக்க) ''தெரியலைன்னே போட்ருங்க!''

வெங்கட்பிரபு: ''அப்போ காந்தி கல்கத்தாவில் உண்ணாவிரதம் இருந்தார்னு சொல்வாங்க. காந்தி ஏதாச்சும் பதவியில இருந்தாரா என்ன? நீங்க என்னைவெச்சு போங்கு ஆட்டம் ஆடிராதீங்க பாஸ்!''

ஜனனி அய்யர்: ''ஏம்ப்பா, குழப்பிவிடுறீங்க? ஆக்சுவலி, காந்தி அமைச்சராவே இல்லைப்பா!''

'' 'ஹைபிஸ்கஸ் ரோஸாசினன்சிஸ்’ என்றால் என்ன?''

சரியான பதில்: செம்பருத்திப் பூவின் தாவரப் பெயர்!

ஸ்ருதி: ''ஹைய்யா... எனக்குத் தெரியுமே! வெஜ் சாப்பிடுற விலங்குக்குத்தானே இந்தப் பேர்! என்னது இல்லையா? அது ஹெர்பிவோரஸா? ம்... கண்டுபிடிச்சிட்டேன். செம்பருத்தி!''

அழகிய பெரியவன்: ''செம்பருத்தி! இதை இப்படிச் சொல்லணும்னு எவன் சொல்லிக் கொடுத்தது? பசங்களுக்கு இதைச் சொல்லிப் புரிய வைக்கிறதுக்குள்ள, வாய் எல்லாம் கோணிக் குது!''

அஞ்சலி: ''என்னமோ ஒரு செடி? செம்பருத்தி... செம்பருத்திப் பூ. ஹைய்யா... ஜாலி!''

வெங்கட்பிரபு: ''என்னமோ ஒரு பூவுதான். ம்... செம்பருத்தி?''

ஜனனி அய்யர்: ''செம்பருத்தி!''

''பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பெயர் என்ன?''

சரியான பதில்: ஹீனா ரப்பானி கர்.

ஸ்ருதி: ''வெளியுறவுத் துறை அமைச்சரா ஒரு பெண் இருக்காங்கன்னு தெரியும். பேர் முக்கியமாங்க?''

அழகிய பெரியவன்: ''அவங்க சினிமா நடிகை மாதிரி அழகா இருப்பாங்கன்னு மட்டும் ஞாபகம் இருக்கு. பேரை மறந்துட்டேன்.''

அஞ்சலி: ''காலையிலகூட பேப்பர்ல படிச்சேன். அழகா இருந்தாங்க. பேரு... ஹீனா?''

வெங்கட்பிரபு: ''பாஸ்... பாஸ்...'' (பதறுகிறார்)

ஜனனி அய்யர்: ''நம்ம வெளியுறவுத் துறை அமைச்சரையே எனக்குத் தெரியாது. பாகிஸ்தானோட அமைச்சர் பெயரா? சான்ஸே இல்லை!''

'' 'எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் வரும் 'செண்பகமே... செண்பகமே!’ பாட்டில் வரும் 'செண்பகம்’ யார்? பெண்ணா... மாடா?''

சரியான பதில்: படத்தில் ரெண்டு பேர் பேரும் செண்பகம்தான்.

மினிஸ்டர் காந்தி?

ஸ்ருதி: ''நிச்சயமா மாடு இல்லீங்க... பொண்ணாத்தான் இருக்க முடியும். அந்தப் பொண்ணை கரெக்ட் பண்ணத்தானே அந்தப் பாட்டே!''

அழகிய பெரியவன்: ''பெண் மாடா இருக்கலாம்... அதாவது பசு மாடு!''

அஞ்சலி: (அட்டகாசமான சிரிப்புடன்) ''மாடுதான்!''

வெங்கட்பிரபு: ''ரெண்டு பேர் பேருமே செண்பகம்தான். நிச்சயம் இது சரியான பதில். ஏன்னா, அது எங்கப்பா டைரக்ட் பண்ண படம்!''

ஜனனி அய்யர்: ''ஹா... ஹ்... ஹா... ரெண்டும்?!''

'' 'கரகாட்டக்காரன்’ படத்தில் வரும் சிவப்பு கலர் காரின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன?''

சரியான பதில்: டிசிஎக்ஸ் 3322

ஸ்ருதி: ''வேணாம்... வலிக்குது... அழுதுருவேன்!''

அழகிய பெரியவன்: ''ராமராஜன் டிரெஸ் கலரையும் அந்த கார் கலரையும் பார்க்கும்போது அந்த ஸீன்ல வேற எதாவது கண்ணுல படுமா? நீங்களே சொல்லுங்க?''

அஞ்சலி: ''கடவுளே... படம் பார்க்கும்போது இவ்வளவு உன்னிப்பாவா கவனிப்பீங்க?''

வெங்கட் பிரபு: ''அந்த காரை யார் வெச்சிருக்காங்கன்னு தெரியும். பட், அதோட நம்பர் தெரியாது.''

ஜனனி அய்யர்: ''அந்த கார் இம்பாலா கார். அது தெரியும். அதேபோல, ஒரு கார் எங்க படத்துலயும் வரும். ஹைனஸும் விஷாலும் வருவாங்க. ஆனா, 'கரகாட்டக்காரன்’ ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் சான்ஸே இல்லை!''

''குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் பாபுவின் செல்லப் பெயர் என்ன?''

சரியான பதில்: பொட்டு சுரேஷ்.

ஸ்ருதி: ''குண்டர் சட்டம்... ஒல்லியர் சட்டம்னு எல்லாமா சட்டம் இருக்கு?''

அழகிய பெரியவன்: ''பொட்டு சுரேஷ்.''

அஞ்சலி: ''எனக்கும் க்ரைம் நியூஸுக்கும் சம்பந்தமே கிடையாது. ஸோ, பாஸ்.''

வெங்கட் பிரபு: ''நாம எல்லாம் ஜாலி பாய்ஸ் பாஸ். நமக்கு எதுக்கு பாலிடிக்ஸ்?''

ஜனனி அய்யர்: ''எனக்கு சுரேஷ் பாபுவையே தெரியாது. அவரோட செல்லப் பெயர் எல்லாம் கேட்டா எப்படிங்க?''