வெளியிடப்பட்ட நேரம்: 22:48 (12/05/2017)

கடைசி தொடர்பு:22:47 (12/05/2017)

டிஜிட்டல் வடிவில் கமலின் வெற்றிவிழா ட்ரெய்லர்!

கமல்ஹாசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற 'வெற்றிவிழா' திரைப்படம் டிஜிட்டல் வடிவில் வெளிவருகிறது. அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கமல்

கமல், பிரபு, அமலா நடிப்பில் 1989-ம் வருடம் வெளியான திரைப்படம் 'வெற்றிவிழா'. பிரதாப் போத்தன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 175 நாள்கள் திரையரங்கில் ஓடி இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனிடையே இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே வெற்றிவிழா படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நினைவுகள் தவறியவராக கமல் அசத்தியிருக்கும் வெற்றிவிழா அன்றைய காலத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. அண்மையில் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' திரைப்படம் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருந்தது. இதையடுத்து கமலின் வெற்றிவிழா டிஜிட்டலில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.