ஹாலிவுட்டின் அடுத்த பிரமாண்டம்... ஜாக்கி சான் - சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணையும் ஆக்‌ஷன் படம்! | Jackie Chan and Sylvester Stallone to act in an upcoming Hollywood movie

வெளியிடப்பட்ட நேரம்: 04:43 (13/05/2017)

கடைசி தொடர்பு:11:43 (15/05/2017)

ஹாலிவுட்டின் அடுத்த பிரமாண்டம்... ஜாக்கி சான் - சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணையும் ஆக்‌ஷன் படம்!

அதிரடி மன்னன் ஜாக்கி சான் மற்றும் ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் இணைந்து முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையம்சம்கொண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளனராம். இப்போது, ஹாலிவுட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்.

'எக்ஸ்பெண்டபல்ஸ்' வரிசைத் திரைப்படங்களின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஸ்டாலோன், இப்போது ஜாக்கியுடன் கை கோத்திருப்பது படத்தின் வீச்சை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்துக்கு 'எக்ஸ்-பாக்தாத்' (Ex- Baghdad) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்.

இரண்டு முன்னாள் அதிரடிப்படை வீரர்கள், பாக்தாத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பாக  அழைத்து வருவதுதான் கதைக் கரு. கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறதாம். த்ரில்லர், ஆக்‌ஷன், விறுவிறுப்பு என்ற எதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.