வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:31 (15/05/2017)

சிவப்பு கம்பள விரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான்..!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகப் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் படம் 'சங்கமித்ரா'. இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.

இதில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கவுள்ள 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படத்தை அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். இதற்காக, சங்கமித்ரா படக்குழுவினர் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தில் நடக்க உள்ளனர்.
இந்த, அற்புதமான நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொள்வார் என தற்போது அறிவித்துள்ளனர். ‘படக்குழுவோடு நானும் சிவப்பு கம்பளத்தில் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க