சாதனை படைத்த விவேகம் டீசர் - மூன்று நாள்களில் டீசரை பார்த்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா ?

அஜித்குமார், இயக்குநர் சிவாவுடன் இணைந்து 57-வது படத்தை அறிவித்த நாளில் இருந்தே பயங்கரமான பரபரப்பு எகிறியது. அடுத்தடுத்த நாள்களில்  படப்பிடிப்புத் தளங்களில் இருந்து வெளியான புகைப்படங்கள் தான்,  அன்றைய நாளில் இணையதளங்களில் வைரல். இத்தகைய நிலையில், மே 11-ம் தேதி பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விவேகம் டீசர் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே விவேகம் டீசர் கபாலி, தெறி உள்ளிட்ட படங்களில் சாதனைகளை முறியடித்தது. டீசர் வெளியான 45 நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்குகளைப் பெற்றது. தென்னிந்திய திரைப்படங்கள் இதுவரையில் உருவாக்கியிருந்த அனைத்து சாதனைகளையும் விவேகம் டீசர் முறியடித்துள்ளது. தெறிக்கவிடலாமா... என்று வேதாளத்தில் கேட்ட அஜித்குமார் விவேகத்தில் never ever give up... என்கிறார். இதுதான் இப்போது அஜித் ரசிகர்களின் favourite டையலாக்... விவேகம் படத்தின் டீசரை இதுவரையில் ஒருகோடி பேர் வரை பார்த்துள்ளனர். மூன்று நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை எட்டியிருப்பது தான் விவேகத்தின் தற்போதைய சாதனை...

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!