Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குங்பூ மாஸ்டராக பிரபுதேவா!

டான்ஸ் மாஸ்டராகவும் இயக்குநராகவும் இருக்கும் பிரபுதேவா, லட்சுமி மேனனுக்காக இப்பொழுது குங்பூ மாஸ்டராக அவதாரம் எடுத்துள்ளார். 

prabhudeva

இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிக்கும் படம் 'யங் மங் சங்', இது ஒரு காமெடி ஃபிலிம். 'கொம்பன்' படத்துக்குப் பிறகு, லட்சுமி மேனன்  இந்தப் படத்தில் கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை, வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்தப் படத்தில், பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர்பச்சான் நடிக்கிறார். மேலும், படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில், பிரபுதேவா குங்பூ கற்றுத்தரும் மாஸ்டராக நடிக்கிறார். அதனால்தான் இந்தப் படத்துக்கு, 'யங் மங் சங்' எனப் பெயரிட்டுள்ளனர். அமிர்ஷ்  இசையமைக்கிறார். லட்சுமி மேனனுடன் இந்தப் படத்தில் கைகோக்கும் பிரபுதேவா, ஹன்சிகாவுடன் 'குலேபகாவலி' படத்திலும் நடித்துவருகிறார்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close