வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (15/05/2017)

கடைசி தொடர்பு:15:35 (15/05/2017)

குட்டி மஹேந்திர பாகுபலி பற்றி ஒரு சுவாரஸ்யம்!

'பாகுபலி' படத்தில், குட்டி மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தை நட்சத்திரம்குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

'பாகுபலி' படத்தில், பாகுபலியை ரசித்த அனைவரும் கண்டிப்பாக மகேந்திர பாகுபலியையும் ரசித்திருப்பார்கள். 'இரண்டு பாகுபலியாகவும் நடித்தது பிரபாஸ்தானே... அப்புறம் எப்படி ரசிக்காமல் இருப்பார்கள்' என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், இரண்டு பாகுபலியைவிட ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கியது, ரம்யா கிருஷ்ணன் கையில் படத்தின் ஆரம்பக் காட்சியில் தோன்றிய குட்டி மகேந்திர பாகுபலிதான். 

இப்போது, அந்த குட்டி மகேந்திர பாகுபலியைப் பற்றி, மலையாள செய்தி ஊடகமான  மனோரமாவில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, உண்மையாகவே குட்டி மகேந்திர பாகுபலி ஒரு பெண் குழந்தையாம். பிறந்து 18 நாளே ஆன அக்‌ஷிதா வால்ஸ்லேன்யைத் தான் பாகுபலி படத்துக்காக நடிக்க வைத்துள்ளனர். அக்‌ஷிதா நடித்த காட்சிகளை மட்டும் எடுத்து முடிக்க  ஐந்து நாள்கள் ஆனதாம்.  

குழந்தை அக்‌ஷிதாவின் தந்தை வால்ஸ்லேன், கேரள திரைப்படத் தயாரிப்பின் மேற்பார்வையாளர் ஆவார். அக்‌ஷிதாவுக்கு, பாகுபலி படத்தின்மூலம் ஒரு மகத்தான வாய்ப்பு கிடைத்துவிட்டதாகப் பலரும் கருதுகின்றனராம். அக்‌ஷிதாவுடன் பிரபாஸ் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் இன்றளவும் வைரல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க