என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

ஒன் ஐ லேண்ட்!

ம.கா.செந்தில்குமார்,படம் : வீ.நாகமணி

##~##

ண்டன் டி.என்.ஏ.டி, அமெரிக்காவின் பி.டி.என், நியூயார்க் ஃபெஸ்டிவல், ஐ.பி.ஏ, ஃப்ரான்ஸின் கேன் லைன், லண்டன் இன்டர்நேஷனல் அவார்டு, சோனி வேர்ல்டு போட்டோகிராஃபி அவார்டு... இவை எல்லாம் உலக அளவில் சரத் ஹக்சர் பெற்று இருக்கும் விருதுகள். 'ஒன் ஐ லேண்டு’ என்ற பெயரில் உலக அளவில் சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஆகச் சிறந்த புகைப்படங்களைத் தொகுத்து, ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் சரத். இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு புகைப்படமும் ஓர் அற்புதம்.  

ஒன் ஐ லேண்ட்!

'' 'ஒன் ஐ லேண்ட்’ என்ன கான்செப்ட்?''

''போட்டோகிராஃபி சம்பந்தமா எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், மத்த போட்டோகிராஃபர்களின் போட்டோக்களைத் தான் முதலில் தேடிப் பிடிச்சுப் பார்ப்பேன். கிரியேட்டிவ் டைரக்டர்களுக்கு மத்த போட்«டாகிராஃபர்களோட வெப்சைட்ஸ்ல போய்த் தேடுறதுக்கு நேரம் கிடைக்காது. அவங்களுக்காக ஆரம்பிச்சதுதான் இந்த 'ஒன் ஐ லேண்ட்’ இணையதளம். இதில் உலகம் முழுக்க உள்ள பெஸ்ட் போட்டோகிராஃபர்களின் படங்கள் இருக்கும். இதில் 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களா இருக்கிறாங்க. அவங்களோட சிறந்த 9,000 படங்களைப் பார்க்கலாம்!''

ஒன் ஐ லேண்ட்!

''இந்தப் புகைப்படங்களைப் புத்தகமாக்கும் ஐடியா எப்படி வந்தது?''

''இந்தப் புத்தகத்தில் 102 பேரின் 179 புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் போட்டோ வரணும்னா, ஒவ்வொரு பக்கத்துக்கும் பணம் செலுத்தணும். அவர்களுக்கும் இது ஒரு புரமோஷன். இந்தப் புத்தகத்தை, உலகில் உள்ள முக்கியமான விளம்பர நிறுவனங்களுக்கும் அனுப்பிவெச்சிருவோம்!''

''நீங்களே ஒரு போட்டோகிராஃபர். இப்படி மற்றவர்களை புரமோட் செய்வதால், உங்க பிசினஸ் பாதிக்காதா?''

''இந்த பொசஸிவ்னெஸ்தான் நம்ம பிரச்னையே. நான் ஒரு போட்டோகிராஃபர். ஆனால், நான்தான் பெஸ்ட்னு கிடையாது. வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 'எனக்கு எல்லாமே தெரியும். நான்தான் பிஸ்தா’ என்றால், இங்கு வேலைக்கு ஆகாது!''  

ஒன் ஐ லேண்ட்!
ஒன் ஐ லேண்ட்!

''அடுத்த திட்டம் என்ன?''

''வருடக் கடைசியில் புரொஃபஷனல், அமெச்சூர், ஃபேஷன், வைல்டு லைஃப்னு நிறைய வகைகளில் 'ஒன் ஐ லேண்ட்’ விருதுகள் தரப்போறோம். இதைத் தவிர, 'ஆண்டின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்’ங்கிற விருதும் அதில் ஸ்பெஷல்!''

''சினிமாவில் இருந்து ஏன் விலகியே இருக்கிறீங்க?''

''100 படங்களுக்கு மேல் வொர்க் பண்ணினேன். 'விருமாண்டி’ படத் துக்காக, தினமும் 1,000 பேரை வெச்சு போட்டோ ஷூட் பண்ணினோம். அந்தப் பொறுமை இப்போ இருக்குமான்னு தெரியலை. 'நீங்கதான்வேணும்’னு யாராவது வற்புறுத்தினா... பார்க்கலாம்!'' என்கிறார் சரத்.