தமிழகத்தில் மட்டும் 'பாகுபலி 2' கலெக்‌ஷன் ரூ.100 கோடி! இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்குமோ!? | Baahubali 2 crosses Rs.100 crore mark in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (16/05/2017)

கடைசி தொடர்பு:08:43 (16/05/2017)

தமிழகத்தில் மட்டும் 'பாகுபலி 2' கலெக்‌ஷன் ரூ.100 கோடி! இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்குமோ!?

 ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது, 'பாகுபலி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம். வெளியாகி 10 நாள்கள் கூட கடக்காத நிலையில், 1000 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. இதனால், இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் புரிந்தது. இந்நிலையில், தமிழில் மட்டும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. மேலும், பாகுபலியின் மலையாள வெர்ஷன் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

'பாகுபலி 2' திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் 250 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில், இதுவரை 1,300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.