வெளியிடப்பட்ட நேரம்: 03:46 (16/05/2017)

கடைசி தொடர்பு:08:14 (16/05/2017)

'பாகுபலி'யைப் பாராட்டித்தள்ளிய அக்‌ஷய் குமார்!

'பாகுபலி 2' படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வசூல் குவித்த படம், 'பாகுபலி-2'. பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் இந்தப் படத்தை, பல திரையுலகப் பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர். படம் பார்த்த நடிகர் அக்‌ஷய் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் 'பாகுபலி'யைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அக்‌ஷய்குமார்

'ஒருவழியாக இன்றுதான் 'பாகுபலி' படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கும், அதன் வெற்றிக்கும் தகுதியானது பாகுபலி. இந்தப் படம், இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' எனப் புகழ்ந்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு, ராணா டகுபதி உள்ளிட்ட 'பாகுபலி' படக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க