Published:Updated:

ரியல் ஹீரோஸ்!

ப.திருமாவேலன்

ரியல் ஹீரோஸ்!

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

ரீல் ஹீரோக்கள் நிறையவே உள்ள நாட்டில் ரியல் ஹீரோக்கள் குறைவுதான். 'போற்றுவார் போற்றட்டும்... புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்’ என்று சொல்லிலும் செயலிலும் நினைத்ததை நிகழ்த்தும் அதிரடி ஆட்கள் சிலர் உண்டு.

 'பப்ளிசிட்டிக்காகப் பண்றாங்க...’ 'உள் நோக்கத்தோடு வேலை பார்க்கிறாங்க’ என்று சில சமயம் இவர்கள் மீது விமர்சன அம்புகள் பாய்ந்தாலும்... நியூஸ் சிப்ஸ்கள் கொடுப்பதில் வஞ்சனை இல்லாதவர்கள் இவர்கள்!

சுரீர் சுவாமி!

ரியல் ஹீரோஸ்!

னது ஜிப்பா பாக்கெட்டில் எப்போதும் வெங்காய வெடி வைத்து இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி... பிரஸ் மீட்டில் பந்திவைக்க ஆரம்பித்ததுமே பல இடங்களில் வெடிக்கும். ஜெயலலிதா முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது ஆரம்பித்த இவரது ஆக்ஷன் சினிமா, தியாகராஜ பாகவதர் படத்தைப்போலப் பல தீபாவளிகளைத் தாண்டி தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு எதிராக 15 ஆண்டுகளுக்கு முன்னால் கவர்னர் சென்னா ரெட்டியிடம் இவர் கொடுத்த சாதாரண புகார்தான்... இன்று வரை பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து, அம்மையாரை நிம்மதி இழக்கவைத்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமருக்கு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக இவர் தட்டி விட்ட ஒரு கடிதம்தான்... கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி, அவரது மகளை திகார் சிறையில் அடைத்தது. பாக்யராஜ் படம் மாதிரி காமெடியில் தொடங்கி சீரியஸாக முடிப்பதில் சுவாமி இதுவரை சோடை போகவில்லை!

டிராஃபிக் டிராஜிடி!

பேனாவையும் பேப்பரையும் மட்டும் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தையும் போலீஸையும் போட்டுப் பார்க்க முடியுமா? 'முடியும்’ என்பார் 'டிராஃபிக்’ ராமசாமி. தூசி படிந்த கறுப்பு ஷூ போட்டு நடந்து வந்து... கோழி முட்டை கண்ணாடியைத் துடைத்துப் போட்டு... அரதப் பழசான கேமராவில் ராமசாமி போட்டோ பிடிக் கிறார் என்றால், போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். கண்ட இடம் எல்லாம் கட்-அவுட் வைப்பது தொடங்கி... சென்னை தியாகராய நகரில் வரம்புமீறிக் கட்டப் பட்ட கட்டடங்களை இடிப்பது வரை... ஊரைப்பற்றிக் கவலைப்பட இவர் மட்டும் தானோ என்று நினைக்கத் தோன்றும். குடும்பத்தை விட்டு விலகி... தனியாக ரூம் போட்டுத் தங்கி இருக்கும் ஒன் மேன் ஆர்மி!

'கன்’ கண்ணப்பன்!

ரியல் ஹீரோஸ்!

க்யூஸ்ட்டுகளுக்கு மட்டும் அல்ல... அந்த ஸ்டைல் போலீஸ்காரர்களுக்கும் கண்ணப்ப னைக் கண்டால் பிடிக் காது. அந்த அளவுக்கு நேர்மையான, கறாரான மனிதர். நேர்மையாகவும் நேரங்காலம் பார்க்காமலும் வேலை பார்க்க வேண்டும் என்றால், எந்த போலீஸுக்குப் பிடிக்கும்? எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சி ஆசியோடு நடக்கும் தகிடுதத்தங் களை அஞ்சாமல் எதிர்ப்பவர். சூதாட்டக் கும்பலைப் பிடிக்கப்போன இடத்தில் துணை மேயர் பெயரைச் சொன்னதும்... சட்டையைக் கழற்றி உதைக்கச் சொன்னதில் நெல்லையில் பிரபலமாகி... இப்போது மதுரையைச் சுத்தப்படுத்தும் வேலையில் இருக்கிறார் கண்ணப்பன். ஷாமியானா பந்தல் போட்டு உட்கார்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார் வாங்குவார். ஆனால், ஆக்ஷன் எடுப்பது படு சீக்ரெட்டாக இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுரையில் நிகழ்ந்த அத்தனை சமூக விரோதச் செயல்களையும் கிரிமினல் வழக்குகளாக மாற்றுவதில் துரிதமாகி இருக்கிறார் கண்ணப்பன். 'சிபாரிசுடன் வந்தாலே, தப்பான ஆளாத்தான் இருக்கும்’ என்பார். அழகிரி சிபாரிசுகள் அத்தனையும் அலசப்படுகிறது இவரால்!

'பின்னிய’ பிரவீன்!

'நரேஷ் குப்தா இருந்தா... சூப்பரா இருக்கும். யாரோ பிரவீன் குமார்னு ஒருத்தர் வரப் போறாராம்’ என்று கவலையோடு வந்தது முதல் செய்தி. ஆனால், அந்த பீகார்க்காரரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த ஜார்க்கண்ட்காரர் ஜெட் வேகத்தில் பயணித்தார். ஆளும் கட்சி ஆதரவு அதிகாரிகள், போலீஸை வைத்துக்கொண்டே கடந்த சட்டமன்றத் தேர்தலைச் சுத்தமாக நடத்திக் காட்டிய பிரவீன் குமார், வருங்காலத் தேர்தலுக்கும் சேர்த்தே நன்மை செய்தவர். பட்டவர்த்தனமாக நடந்த திருமங்கலம் காட்சிகளுக்கு ஓரளவாவது மங்களம் பாடினார். கட்சிகள் கையில் இருந்த பூத் சிலிப்புகளைப் பறித்து, மக்களிடம் நேரில் கொடுத்ததே, புதிய வாக்காளர்களையும்... ஒட்டுப் போடாதவர் களையும் வீட்டைவிட்டு வெளியே வர வைத்தது.

'பணம் வாங்கி வாக்களிப்பது மகா கேவலம்’ எனப் பொது மக்களை நினைக்க வைத்து... ஒரே மாதத்தில் லட்சக்கணக்கான வர்களைத் திருத்திய ரசாயன மாற்றத்துக்குச் சொந்தக்காரர்!

ஊழல் எதிர்ப்பு உமா!

ரியல் ஹீரோஸ்!

துரை சுடுகாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்னால் உமாசங்கர் மூட்டிய ஊழல் எதிர்ப்பு நெருப்பு இன்னமும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வெளியான குற்றச்சாட்டுகளால் அந்த ஆட்சியை மூழ்கடித்தது மட்டும் அல்லாமல், அடுத்து அமைந்த தி.மு.க. ஆட்சியில் அதிகார மட்டத்து ஐ.ஏ.எஸ்- களின் மீதான புகார்கள் மீதும் கறாராக நடந்துகொண்டார். அடுத்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைதி ஆக்கப்பட்டார். மீண்டும் தி.மு.க. ஆட்சியில் பாதி காலத் துக்கு கருணாநிதியின் செல்லப் பிள்ளை யாகவும்... மீதியில் வேண்டாத மனிதராகவும் ஆகிப் போனார். ஒரு அதிகாரி சஸ்பெண்ட் ஆனதற்காக தமிழகம் போராட்டங்களால் சூழ்ந்தது உமாசங்கருக்காகத்தான். இப்போது கோ-ஆப்டெக்ஸிலும் இவருக்கு ஒத்துழைப்புகள் இல்லை. போலி நூல்களை வைத்து துணிகளைத் தயாரிக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு இவர் 'செக்’ வைக்க, அவர்கள் மறை முக சதி வேலைகளில் இறங்கி உள்ளனர். 'வாழும் வரை போராடு’ என்பதற்கு ஏற்பவே வாழ்கிறார் உமா சங்கர்!

ஆக்ஷன் ஆஸ்ரா!

ரியல் ஹீரோஸ்!

'பொட்டு’ சுரேஷைப் பொறி வைத்துப் பிடித்தது ஒன்றே போதும் ஆஸ்ரா கர்க்கின் ஆக்ஷன் அதிரடிக்கு. 'எத்தனைத் தனிப் படைகள் போட்டாலும், பொட்டுவைப் பிடிக்க முடியாது. ஆள் எங்கோ பறந்தாச்சு!’ என்று அடிப்பொடிகள் சொல்லிக்கொண்டு இருக்க... கோ அக்யூஸ்ட்டு தளபதியை வைத்தே போன் போட்டு... அன்பாக வரவைத்துப் பிடித்தார் ஆஸ்ரா கர்க். உ.பி-காரரான இவர், எந்த ஊருக்குப் போனாலும் தனது செல்போன் நம்பரை எல்லார்க்கும் விதைப்பார். அநாமதேயமாக வரும் நியூஸ்களை வைத்துத்தான் குற்றவாளிகளுக்குக் குறி வைப்பார். மதுரையில் கூஜா வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்பதை நெல்லையில் மோப்பம் பிடித்துச் சொன்ன ஆஸ்ரா, தற்கொலை மற்றும் விபத்துகளாக மூடப்பட்ட மரணங்களைத் தோண்டி எடுப்பதில் கில்லாடி.

தனித் தனி கோஷ்டியாகப் பிரிந்து கிடந்தாலும் நெல்லையில் பொறுப்பில் இருந்த கார்க்கை மாற்றுவதில் ஆவுடை யப்பனும் கருப்பசாமிப் பாண்டியனும் இணைந்தே செயல்பட்டார்கள். 'எங்கே போனாலும் இப்படித்தான் இருப்பேன்’ என்பது ஆஸ்ரா கர்க் அடிக்கடிச் சொல்வது!

சகாயம் தேடாத சகாயம்!

.ஏ.எஸ். அதிகாரிகளில் தனது சொத்துக் கணக்கைப் பகிரங்கமாக முதலில் அறிவித்த துணிச்சல்காரர். கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது... ரிப்பன் கட் பண்ணப்போவது... என இருக்காமல், கிராமங்களைத் தேடிப் போவது, அரசுப் பள்ளி மாணவர் களிடம் உற்சாகப்படுத்திப் பேசுவது போன்ற நிகழ்வுகளில் மனநிம்மதி அடைபவர். நோ என்ட்ரியில் ஓட்டிய பஸ் டிரைவரைப் பிடிப்பது முதல்...

ரியல் ஹீரோஸ்!

குடித்துவிட்டு டூ வீலர் ஓட்டியவனை மடக்குவது வரை எப்போதும் ஆக்ஷன் சகாயம் இவர். 'நேர்மையாக இருப்பதில் ஒரே ஒரு சிக்கல்தான். நாளுக்கு நாள் எதிரிகள் அதிகம் ஆவாங்க. அவங் களை மட்டும் சமாளிச்சாப் போதும்’ என்பார் சர்வசாதாரணமாக.

தேர்தலுக்கு முன்பே அழகிரிக்கு அடங் காத குதிரையாக மதுரையில் வலம் வந்த வர். இன்று கண்ணப்பன், ஆஸ்ரா கர்க், சகாயம் இணைந்த டீம் அமைந்து இருப் பது மதுரை மக்கள் வாங்கிய வரம்!

இந்தப் பட்டியல் இன்னும் இன்னும் அதிகமாக... தமிழ் மக்களும் இருக்கலாம் தவம்!