வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (18/05/2017)

கடைசி தொடர்பு:12:27 (18/05/2017)

ரஜினியின் அடுத்த படம் 'தலைவர் 161' இல்லை..!

'கபாலி' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகிப் பல மாதங்கள் ஆன நிலையில், இந்தப் படத்தைப் பற்றி எந்தச் செய்தியைப் பகிர்ந்தாலும் 'தலைவர் 161' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திவந்தனர். 

இந்தப் படத்தில் கமிட்டானவர்களும் இதே நம்பரைப் பயன்படுத்திய நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை, ரஜினி 163 படங்கள் நடித்துள்ளாராம். இது, அவர் நடிக்கும் 164-வது படம் என அந்தத் தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 'தலைவர் 161' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வந்த ரசிகர்கள், தற்போது 'தலைவர் 164' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கத் துவங்கிவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க