கலாபவன் மணி மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்..!

கலாபவன் மணி மரணமடைந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களுக்கு மேல் நடித்தவர், கலாபவன் மணி. இவர் கடந்த ஆண்டு மார்ச்  4 ஆம் தேதி தன் பண்ணை வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை கொச்சியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  மார்ச் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.


கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில் தடயங்கள் எதுவும் கிடைக்காததால் போலீஸ் விசாரணையைத் தள்ளிப் போட்டது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றம், கலாபவன் மணியின் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. இனியாவது, அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழுமா? என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!