வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (18/05/2017)

கடைசி தொடர்பு:07:40 (19/05/2017)

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்ட 'சங்கமித்ரா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

இயக்குநர் சுந்தர் .சி பிரமாண்டமாக இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'சங்கமித்ரா'. இந்தப் படத்தில், 8 ஆம் நூற்றாண்டின் இளவரசியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

Sangamithra


லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்துவரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படத்தை அறிமுகம் செய்து இருக்கிறார்கள் படக்குழுவினர். இதுவரை மொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில், நடிகர் ஜெயம் ரவி போர்க்கப்பல் ஒன்றில் காட்சியளிக்கும் போஸ்டரும் மற்றொன்றில் ஸ்ருதிஹாசன் வாளுடன் குதிரையில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. 

Sangamithra


கேன்ஸ் திரைப்பட விழாவையொட்டி, பிரான்ஸில் இருக்கும் முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும், சங்கமித்ரா போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.