வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (19/05/2017)

கடைசி தொடர்பு:14:26 (19/05/2017)

சிம்புவுக்காக வைரமுத்து எழுதும் முதல் பாடல்..!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்தப் படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, சனா கான் நடிக்கின்றனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். 

இந்நிலையில், இந்தப் படத்தில் சிம்பு அறிமுகமாகும் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார், இது ஒரு நாட்டுபுறப் பாடலாம். அதுவும் தமிழ் சினிமாவில் சிம்புவுக்காக வைரமுத்து எழுதும் முதல் பாடல் இதுதான். அதனால் இந்தப் பாட்டின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கூடிய விரைவில் இந்தப் பாடலுக்கான ஷூட்டீங் பிரமாண்டமாக ஆரம்பிக்கப் போகிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க