வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (19/05/2017)

கடைசி தொடர்பு:14:50 (19/05/2017)

'ஹேப்பி’ - ரசிகர்களைச் சந்தித்த பிறகு ரஜினி ட்வீட்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாகப்போகிறது. 'கபாலி' படத்துக்குப் பிறகு ரஞ்சித், ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. 

 ரஜினி, கடந்த ஐந்து நாள்களாக தன் ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ரஜினி அரசியலைப் பற்றி பேசியது பல விவாதங்களுக்கு உள்ளாகிவருகிறது. 

ரஜினி, அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று பலர் குழப்பத்திலிருக்க, ரொம்ப ரிலாக்ஸ்டாக தன் ரசிகர்களைச் சந்தித்துவிட்டார்.  இந்த நிலையில், ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பு பற்றி  ட்விட்டரில், 'ரசிகர்களைச் சந்தித்த பின் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மறக்க முடியாத நிகழ்வு இது' என்று ரஜினி ட்விட் தட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க