1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..! | Baahubali 2 crossed 1,500 crore collection

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (19/05/2017)

கடைசி தொடர்பு:16:26 (19/05/2017)

1,500 கோடி ரூபாயைத் தொட்டது பாகுபலி வசூல்..!

 

'பாகுபலி' திரைப்படம் வெளியாகி 21 நாள்கள் முடிந்த நிலையில், இந்தப் படம் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது.

வெளியான நாள் முதல் இன்று வரை பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தில் இருக்கிறது.
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தின் வசூல் 650 கோடியாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தின் வசூல் 1,500 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இதற்கு முன்பு வரை இருந்த  எல்லா படத்தின்  சாதனையையும் இந்தப் படத்தின்  வசூல் முறியடித்துவிட்டது.  தமிழில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியுள்ளது, இந்தியில் 500 கோடி வசூல்செய்துள்ளது.  


'இந்தியத் திரைப்படம் ஒன்று 1,500 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்' என்று, திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க