Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்பறிவாளனுக்கு ‘ஆக்‌ஷன் வெளியீட்டு விழா’..! விஷாலின் வித்தியாசமான ஐடியா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ், பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் படம், 'துப்பறிவாளன்'. இந்தப் படத்தை, விஷால் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் துப்பறிவாளன் படத்தைப் பற்றி மிஷ்கின் கூறியதாவது:

“துப்பறிவாளன்' படம், துப்பறியும் விஷயங்களைப் பற்றியது. தமிழில் அதிகமாக துப்பறியும் கதைகள் வந்ததில்லை. இந்தத் திரைப்படம், ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' மற்றும் தமிழில் வெளிவந்த 'துப்பறியும் சாம்பு' போன்ற ஒரு கதையாக இருக்கும்.

இந்தப் படத்தில் விஷாலின் பெயர், கணியன் பூங்குன்றன். படத்தில் நடித்துள்ள அனைவரது கதாபாத்திரமும் கவனிக்கும்படி இருக்கும்.  இந்தப் படத்துக்காக இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம், மாறாக 'ஆக்‌ஷன் வெளியீட்டு விழா' நடத்தலாம் என்று விஷால் என்னிடம் கூறினார். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்'' என்றார்.

Powered By Tamil Flash News 

சினிமா உலகிலிருந்து பரபர செய்திகள்... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் ஆப்பில் படிக்கலாம்!

இன்ஸ்டால் செய்ய க்ளிக் http://bit.ly/FreeTFN

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close