வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (19/05/2017)

கடைசி தொடர்பு:21:02 (19/05/2017)

ரஜினி அரசியலுக்கு வரலாமா..? கஸ்தூரியின் திடுக் ட்விட்!

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி தன் ரசிகர்களை 15 ஆம் தேதியிலிருந்து இன்று வரை ஐந்து நாள்களாகச் சந்தித்தார்.

kasturi tweet

இந்தச் சந்திப்பின்போது, 'அரசியலுக்கு நான் வருவது ஆண்டவன் கையில் உள்ளது' என்று வழக்கம்போலக் கூறினார். அதிலிருந்து ரஜினியின் அரசியல் பற்றி பலர் கருத்துகளைச் சொல்லிவருகின்றனர்.

kasturi

நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிப் பேசியதற்கு கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை...  'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க