கேன்ஸ் திரைப்பட விழாவும் வணக்கம் வைத்த இந்திய சிண்ட்ரெல்லாவும்! 

2017 கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளான நேற்று, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அணிந்துவந்த ஆடை பற்றிதான் சமூக வலைதளங்களில் பேச்சு.  #AishwaryaAtCannes,  #AishwaryaRaiBachchan, #Cannes2017 aishwarya போன்ற ஹேஷ் டேக்குகள், நேற்று முதல் ட்ரெண்ட்!

aishwarya rai
 

ஜொலிக்கும் நீல நிற சிண்ட்ரெல்லா கவுனில், ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்தார் ஐஸ்வர்யா. அவர், ரெட் கார்ப்பெட்டில் வலம் வரும்போது, இந்தியப் பாரம்பர்யத்தை நினைவூட்டும் விதத்தில் வணக்கம் வைத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.

 கடந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில், ஐஸ்வர்யா ராயின் லிப்ஸ்டிக் கலர், ட்ரால் செய்யப்பட்டது. இந்த ஆண்டு, அந்த ட்ரால் முழுவதையும் மறக்கச்செய்து, 'ஐஸ்வர்யா ராய் Back'  என்று புகழாரம் சூட்டவைத்துவிட்டார், முன்னாள் உலக அழகி ஐஸ்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!