'பாகுபலி 2' படத்தைப் பார்த்து ஏ.ஆர். ரஹ்மான் என்ன சொன்னார் தெரியுமா?

'பாகுபலி 2'  ரிலீஸ் ஆனது முதல், தினசரி பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறது. குறிப்பாக, 1,500 கோடி ரூபாய் வசூல்செய்த, முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது பாகுபலி. வசூலில், தினசரி சாதனை படைத்துவருகிறது.

A.R.Rahman


ஒரு பக்கம் வசூல் சாதனைகளைக் குவிக்க, மறுபக்கம் பிரபலங்களின் வாழ்த்துகளும் குவிகின்றன. தமிழில் ரஜினி, சங்கர் என முக்கிய பிரபலங்கள் பலரும் பாகுபலி 2 படத்துக்கு லைக்குகளை வாரி வழங்கினர். முக்கியமாக, 'பாகுபலி 2' படம், 'இந்திய சினிமாவின் பெருமை' என்று புகழ்ந்து தள்ளினார் ரஜினிகாந்த். இந்நிலையில், பாகுபலியை வாழ்த்தும் பட்டியலில், இப்போது இசைப்புயலும் இணைந்துள்ளார். 


இதுகுறித்து, ஏ.ஆர். ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தற்போதுதான் 'பாகுபலி 2' படத்தை சென்னையில் பார்த்தேன்.  இந்தப் படம் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் என்று நம்புகிறேன். ராஜமௌலியும் கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு, உலக அரங்கில் புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!