வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (23/05/2017)

கடைசி தொடர்பு:17:27 (23/05/2017)

இந்த ஹிட் சீரியல்களின் முதல் அத்தியாயம் பார்க்க ரெடியா? #TamilSerial

சீரியல்

உங்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்கள் எதுவெனக் கேட்டால், இரண்டு அல்லது மூன்று சீரியல் பெயரைச் சொல்வீர்கள். ஆனால், அந்த சீரியல்களின் முதல் அத்தியாயத்திலிருந்து நீங்கள் பார்த்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், ஒரு சீரியலை நம் நண்பர்கள் யாரேனும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னால்தான் பார்க்கவே தொடங்குவோம்.

சீரியல்களின் ப்ளஸே அதன் கதை ஏராளமான அத்தியாயங்களுக்கு நீள்வதுதான். கதை நீள, நீள அந்தக் கதாபாத்திரங்கள் நம் நண்பர்களைப் போலாகி விடுவார்கள். அந்த நடிகர்களின் பெயர்கள் மறந்துபோய், சீரியலில் வைத்துள்ள பெயரே நம் மனதில் பதியும். சீரியல் டைட்டில் பாடல்களை ரிங் டோனாக வைத்திருக்கவும் செய்தனர்.

நாம் விரும்பிப் பார்த்த சீரியலின், முதல் அத்தியாயத்தை இப்போது பார்க்கும்போது சில விஷயங்கள் நம்மை நிச்சயம் ஈர்க்கும். பல வருடங்கள் ஒளிப்பராகும் ஒரு சீரியலின் முதன்மையான ரோலில் நடிப்பவர்களின் தோற்றத்தை அந்த சீரியலின் முதல் அத்தியாயத்தைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். கதை தொடங்கும்போது, இருந்த வீடு, நடைபெறும் இடம் உள்ளிட்டவை சீரியல் முடிவடையும்போது வெகுவாக மாறியிருக்கும். சில காதாபாத்திரங்களின் உறவினராக நடித்திருப்பவர்கள் வேறு நபராக இருந்திருப்பர். இன்னும் சில சீரியல்களில் இயக்குநரே வேறொருவராக இருப்பார். இன்னும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்தானே.

ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற சீரியல்களின் முதல் அத்தியாயம் உங்களின் பார்வைக்கு:

சீரியல்

சித்தி: இந்த சீரியல் ராதிகாவுக்கு சினிமாவை விடவும் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. இது ஒளிப்பராகியபோது, இரவு 9:30 மணியானால் பலரும் டிவியின் முன் ஆஜராகிவிடுவர். இரண்டாண்டுகளுக்கும் மேல் நீடித்த இந்த சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. சிவகுமார், யுவராணி, விஜய் ஆதிராஜ், நீனா, அஞ்சு, அஜய் ரத்தினம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த சீரியலின் டைட்டில் பாடலான 'கண்ணின் மணி..' பாடல் எல்லோரையும் பிடித்த ஒன்று. சி.ஜெ.பாஸ்கர் இயக்கியிருப்பார்.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க:  http://bit.ly/2rvWZgA

சீரியல்

கோலங்கள்: நடிகை தேவயானி சின்னத்திரையில் தடம் பதித்த சீரியல். குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் துணிவோடு எதிர்கொள்ளும் பெண்ணாக தேவயானி நடித்திருப்பார். 1500 அத்தியாயங்களைக் கடந்து ஒளிப்பரப்பானது. தேவயானியுடன் தீபா வெங்கட், நளினி, நீலிமா ராணி, அபிஷேக், சத்யபிரியா ஆகியோரோடு சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் 'தொல்காப்பியன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  இதன் முதல் அத்தியாயத்தில் சினிமாவின் அறிமுகக் காட்சியைப் போல தேவயானியின் முதல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2qRIgdo

சீரியல்

திருமதி செல்வம்: 'சேது' படத்தின் மூலம் அறிமுகமான அபிதா நடித்த சீரியல் இது. அவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்திருப்பார். மெக்கானிக் சஞ்சீவ் அவரது மனைவி அபிதா. இவர்களுக்கு உறவினால் ஏற்படும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். பல வீடுகளில் நிகழும் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்ததால் பலருக்கும் விருப்பமான சீரியலாக இது பார்க்கப்பட்டது. 1300க்கும் அதிகமான அத்தியாயங்களைக் கொண்டது. இதன் இயக்குநர் எஸ்.குமரன். சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2qcs4Sy

சீரியல்

தென்றல்: தீபக், ஸ்ருதி ராஜ் இருவரும் இணைந்து நடித்த சீரியல். நடுத்தர குடும்பத்திலிருந்து படித்து, விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் துளசியைப் பற்றிய கதை. தமிழ், துளசிக்கும் இருக்கும் அன்பை மற்றவர்கள் சிதைக்க முயற்சிப்பதும், அவற்றை மீறியும் இருவரின் அன்பு இவர்களைச் சேர்த்து வைப்பதுமாக செல்லும் கதை. நீலிமா ராணி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்திருப்பர். எஸ்.குமரன் இந்த சீரியலை இயக்கியிருப்பார். சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2rLDFJt

சீரியல்

சரவணன் மீனாட்சி: விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியல் இது. இதுவே மூன்று சீசன்களாக எடுத்து வருகின்றனர். அடுத்த சரவணன் யார், மீனாட்சி யார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தவும் செய்கிறது. இந்த சீரியல் முதல் பாகம் தொடங்கப்பட்டது 2011 ஆம் ஆண்டில். சரவணனாக மிர்ச்சி செந்திலும் மீனாட்சியாக ஶ்ரீஜா சந்திரனும் நடித்திருப்பர். இரண்டாவது சீசனில் கவின், ரச்சிதாவும் மூன்றாவது சீசனில் ரியோ - ரச்சிதாவும் சரவணன் மீனாட்சியாக நடித்திருக்கின்றனர்.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2qKoVfB

சீரியல்

மெட்டி ஒலி: நிலத்தரகருக்கு ஐந்து பெண்கள். அவர்களைத் திருமணம் செய்துகொடுப்பது, அதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதுமாக 800 மேற்பட்ட அத்தியாயங்களுக்கு நீண்ட கதை. சேத்தன், காயத்ரி, டெல்லிகுமார், காவேரி, போஸ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்த சீரியலை இயக்கிய திருமுருகன் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2rcMwHl

சீரியல்

நாதஸ்வரம்: இயக்குநர் திருமுருகன் இயக்கிய இரண்டாவது மெகா சீரியல் இது. அவரே முதன்மையான ரோலில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மலர் எனும் ரோலில் நடிகை ஸ்ருதிகா நடித்திருப்பார். காரைக்குடி பகுதியில் நாதஸ்வரம் வாசிக்கும் மெளலி, பூ விலங்கு மோகன் சகோதர்கள். அவர்களின் பிள்ளைகளைச் சுற்றி நடக்கும் கதை. மெளலியின் மகனாக திருமுருகன் நடித்திருப்பார். 2010 ல் தொடங்கி 1300 க்கும் மேற்பட்ட அத்தியாயங்களுக்கு கதை நீண்டது. சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://bit.ly/2qcn8NO

சீரியல்

கல்யாணம் முதல் காதல் வரை: இளம் தம்பதிகளைச் சுற்றி நடைபெறும் கதையாக இந்த சீரியல் அமைக்கப்பட்டிருக்கும். தாய் செல்வம் இயக்கிய இதில் பிரியா பவானி ஷங்கர், அமீத், சாதனா, கவிதா உள்ளிட்டோரும் நடித்திருப்பர். விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது. ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிப்பரப்பான சீரியலைத் தழுவி எடுக்கப்பட்டது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க: http://www.hotstar.com/tv/kalyanam-mudhal-kaadhal-varai/1688/a-visit-to-the-matrimony-bureau/1000044169

சீரியல்

தங்கம்: நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சின்னத் திரை ரசிகர்களிடையே புகழைப் பெற்றுத்தந்த சீரியல். பலவிதமான உறவுகள் உள்ள வீடு, அதில் ஏற்படும் சிக்கல்கள். அவற்றை தனியொரு பெண்ணாக தீர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். இதில், விஜயகுமார், சீமா உள்ளிட்டோர் நடித்திருப்பர். 900 க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் இதன் கதை நீண்டது.  சன் டிவியில் ஒளிப்பரப்பானது.
முதல் அத்தியாயத்தைப் பார்க்க:டிரெண்டிங் @ விகடன்