வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (23/05/2017)

கடைசி தொடர்பு:19:00 (23/05/2017)

சீனாவில் கலக்கும் இந்திய படங்கள்..!

இந்தியப் படங்களுக்கு சீன மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அமீர்கான் நடிப்பில்  இந்தியாவில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த 'டங்கல்' திரைப்படம் சீனாவில் மே 5 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. 

அமீர்கானின் படம் சீனாவில் ரிலீஸாவது  இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே த்ரி இடியட்ஸ் மற்றும் பிகே படங்கள் சீனாவில் வெளியாகியுள்ளன. டங்கல் திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை சீனாவில் மட்டும் 500 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. இதற்கு முன்பு சீனாவில் வெளியிடப்பட்ட இந்திய படங்களின் வசூலை டங்கல் முறியடித்துள்ளது. 

சீன மொழியில் 'டங்கல்' படத்தை இதுவரை 11 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். டங்கல் படத்துக்கு அடுத்ததாக 'பாகுபலி' படமும் சீனாவில் வெளியாகப் போகிறது. 1500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கும் பாகுபலி, சீனாவிலும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க