வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/05/2017)

கடைசி தொடர்பு:16:30 (24/05/2017)

என் அடுத்தப் படத்தில் நிவின் பாலி இல்லை - அல்போன்ஸ் புத்ரன்

'பிரேமம்' படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்ரன், தான் இயக்கும் அடுத்தப் படத்தில் நிவின் பாலி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். 'நேரம்',  'பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் தன் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ''என் அடுத்தப் படத்தை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கி விடுவேன். அதற்காகத்தான் இத்தனை நாள்களை எடுத்துக் கொண்டேன். இந்தப் படம் இசையைப் பற்றிய படம். இசை என்பது ஒரு சமுத்திரம், அந்த சமுத்திரத்தில் நான் முதலில் காலை நனைத்து, இப்போது இறங்கத் துவங்கியுள்ளேன். இசை என்னும் சமுத்திரத்தில் எனக்கு நீச்சல் அடிக்கவும் தெரியாது,  பயணம் செய்ய சொந்த கப்பலும் இல்லை, இருந்தாலும் 'லைஃப் ஆப் ஃபை' படத்தில் வரும் சிறுவனுக்கு உள்ள நம்பிக்கை போல் எனக்கும் தன்னம்பிக்கை உள்ளது.

எனது புதிய படத்தில் நட்பு, காதல் இரண்டும் இருக்கும். இது ஒரு நகைச்சுவையோடு கலந்த உணர்வுபூர்வமான கதை. இந்தப் படத்தில் என் நண்பன் நிவின் பாலி நடிக்கவில்லை. இன்னும் சில படங்கள் இயக்கிய பின் நிவினுடன் ஒன்று சேர்வேன்'' என்று தெரிவித்துள்ளார் அல்போன்ஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க