வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (24/05/2017)

கடைசி தொடர்பு:08:50 (25/05/2017)

நம்ம ஊரு இசையமைப்பாளருக்கு சேவாக் கொடுத்த பரிசு..!

கடந்த வருடம் தமிழகமெங்கும் நடந்த 'தமிழ்நாடு பிரிமியம் லீக்' போட்டியில் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக ஒரு பாடலை தமன் இசையமைக்க, அதை இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டிருந்தார். 

தற்போது இசையமைப்பாளர் தமனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக சேவாக் பரிசு ஒன்றைக் கொடுத்துள்ளார். தமனுக்கு இசையைத் தவிர கிரிக்கெட் மீதும் அதீதக் காதலுண்டு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி தன்னை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளும் தமனுக்கு, மிக அரிதாகக் கிடைக்கக்கூடிய கிரே கலர் நிக்கோலஸ் கிரிக்கெட் பேட்டை சேவாக் பரிசாகக் கொடுத்துள்ளார். இந்தப் பரிசுக்காக தமன் ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க