'' 'காலா' கதையில் ரஜினி தலையிடவில்லை..!'' - பா.ரஞ்சித் #VikatanExclusive | Rajini hasn't involved in the story of 'kaala', says pa.ranjith

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (25/05/2017)

கடைசி தொடர்பு:13:21 (25/05/2017)

'' 'காலா' கதையில் ரஜினி தலையிடவில்லை..!'' - பா.ரஞ்சித் #VikatanExclusive

'கபாலி' படத்துக்குப் பிறகு ரஜினி, ரஞ்சித் மீண்டும் இணைகிறார்கள் என்று தெரிந்த உடனே,  படத்துக்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்து விட்டது. அந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார் என்ற செய்தி கூடுதல் எதிர்பார்ப்பு.

ரஜினியின் இந்த 164-வது படத்துக்கு 'காலா' என்ற பெயரும், கரிகாலன் என்ற அடைமொழியையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக இன்று காலை வெளியிட்டனர்.

படத்தின் பெயர் 'காலா' என்று தெரிந்த உடனே, இந்தப் படத்துக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், 'காலா' திரைப்படம் மும்பை வாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் பெயரான 'காலா', ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும்  இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் என்கிற விவரத்தை இன்று வெளியிடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலையே வெளியாகும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, ரஜினியின் '2.0 ' திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கும் நிலையில், 'காலா' திரைப்படம் 2.0 படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள, இயக்குநர் பா.ரஞ்சித்தை தொடர்புகொண்டோம்...

"இந்தப் படத்தின் ஷூட்டிங், மே 28 ஆம் தேதி மும்பையில் ஆரம்பமாகப்போகிறது. ஆனால், படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்பதுகுறித்தும் இன்னும் முடிவாகவில்லை. இந்தக் கதையில், ஹீரோ கதாபாத்திரத்தை மட்டும்தான் முதலில் எழுதினேன். ரஜினி சாருக்கு அது பிடிச்சு, அவர் ஓகே சொன்னதும் அது சம்பந்தமான சில விஷயங்களைச் சேர்த்து, கதையை எழுதினேன். இந்தப் படத்தின் கதையில், ரஜினி சார் கொஞ்சம்கூட தலையிடவில்லை'’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க